உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புகை பரிசோதனை நிலையம் இல்லாததால் அவதி

புகை பரிசோதனை நிலையம் இல்லாததால் அவதி

குன்னுார்: குன்னுாரில் வாகன புகை பரிசோதனை நிலையம் இல்லாததால் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால், காற்று மாசுபாடு ஏற்பட்டு, மக்களுக்கு நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுக்குள் வைக்க, மாநிலம் முழுவதிலும், 534 வாகன புகைப் பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருகின்றன.நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி உட்பட மற்ற பகுதிகளில் வாகன புகை பரிசோதனை நிலையங்கள் உள்ளன. ஆனால், குன்னுாரில் ஏற்கனவே இருந்த ஒரு நிலையமும் தற்போது செயல்படுவதில்லை. இதனால், டிரைவர்கள் வாகன புகை பரிசோதனை செய்ய சிரமப்படுகின்றனர்.டிரைவர்கள் கூறுகையில், 'குன்னுாரில் புகை பரிசோதனை செய்ய முடியாததால், ஊட்டிக்கு, 18 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். இதற்காக ஆட்டோக்களை, ஊட்டிக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், விதிமுறைகளை காரணம் காட்டி அபராதம் விதிக்கின்றனர். ஊட்டியில், 4 இடங்களில் உள்ளது போல, குன்னுாரிலும் புகை பரிசோதனை நிலையங்களை நிரந்தரமாக வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை