மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
21 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
21 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
21 hour(s) ago
பந்தலுார் : பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழவன் சேரம்பாடி மற்றும் காவயல் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு கிராமப்புற குடியிருப்புகள் மற்றும் டான்டீ தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானைகள், கரடி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவதால் மக்கள் அச்சத்தில் நடமாடி வருகின்றனர். இந்நிலையில், இங்கு ஊராட்சி நிர்வாக மூலம் பொருத்தப்பட்ட தெரு விளக்குகள் அனைத்தும் பழுதடைந்து, தற்போது இருள் சூழ்ந்த பகுதியாக மாறி உள்ளது. இதனால், இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு முன் யானைகள் வந்தாலும் தெரியாத சூழ்நிலை உள்ளது. இப்பகுதியில் பழுதடைந்த தெரு விளக்கை சீரமைக்க வலியுறுத்தி, மக்கள் பல முறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் பலன் இல்லை. இதனால், இரவில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இப்பகுதிகளை ஆய்வு செய்து தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago