உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிரதான சாலை பணி விரைவாக முடிக்கணும்

பிரதான சாலை பணி விரைவாக முடிக்கணும்

ஊட்டி : 'பிரதான சாலையில் நடக்கும் கழிவுநீர் கால்வாய் பணியை பொதுமக்கள் பாதிக்காத வகையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி - குன்னுார் சந்திப்பு இடையே ஆவின் அருகே, நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையில், 10 அடி ஆழம்; 10 அடி அகலத்திற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. ஒருப்புறம் நடக்கும் பணி முடிந்தவுடன் மறுப்புறம் அதே அளவுக்கு கட்டுமான பணி நடக்கிறது. இந்த சாலையில் குன்னுார், மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, சேலம் மற்றும் மஞ்சூர் உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு ஏராளமான அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.பிரதான சாலையில் நடக்கும் இப்பணியால், வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்பட்டு அனுப்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், காலை நேரங்களில் பணிக்கு வருபவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மக்கள் கூறுகையில்,'பிரதான சாலையில் நடக்கும் இந்த பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி