உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தெங்குமரஹாடா கிராமத்திற்கு வாகனத்தில் சென்ற ஓட்டு பெட்டி மாயாற்றில் தண்ணீர் குறைந்ததால் பரிசல் இல்லை

தெங்குமரஹாடா கிராமத்திற்கு வாகனத்தில் சென்ற ஓட்டு பெட்டி மாயாற்றில் தண்ணீர் குறைந்ததால் பரிசல் இல்லை

கோத்தகிரி;கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்லும் ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் பல ஆண்டுகளுக்கு பின் வாகனங்களில் ஓட்டு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டன. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தெங்குமரஹாடா ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, கள்ளம்பாளையம், அல்லி மாயார் கிராமங்களில், 1,708 வாக்காளர்கள் உள்ளனர். மூன்று ஓட்டுச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன.இக்கிராமத்திற்கு செல்ல வேண்டும் எனில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதிகளை கடந்து சென்று வர வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக, தெங்குமரஹாடா கிராமத்திற்குள் நுழைய வேண்டும் என்றால், மாயாறு ஆற்றில் பரிசல்களை பயன்படுத்தி கடந்து செல்லவேண்டும். அதேபோல, தேர்தல் நேரங்களில், ஓட்டு பெட்டிகளையும் பரிசல்களில்தான் அலுவலர்கள் கொண்டு செல்வது வழக்கம். நடப்பாண்டு, கடுமையான வறட்சி காரணமாக, மாயாற்றில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது.இதனால், வழக்கத்திற்கு மாறாக நேற்று, ஊட்டியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ஓட்டு பெட்டிகள், பரிசலை பயன்படுத்தாமல், நேரடியாக வாகனங்களில் தெங்குமரஹாடா ஓட்டுச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை