மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
27-Dec-2025
கூடலுார்;கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், 'ஜிப் லைன் ஹேங்கிங்' சாகச சுற்றுலா, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வாகன சவாரி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.கூடலுார் நாடுகாணியில் ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு பசுமை திட்டத்தின் கீழ், 1.7 கோடி ரூபாய் நிதி மூலம் சுற்றுலா சார்ந்த உள் கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதில், ஒரு பகுதியாக, 22 லட்சம் ரூபாயில் கம்பில் தொங்கியப்படி, சாகச சுற்றுலா பயணிக்க அமைத்துள்ள, 'ஜிப் லைன் ஹேங்கிங்' சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.அதேபோன்று, தாவர மையத்திலிருந்து, 2 கி.மீ., துாரம் வனப்பகுதி வழியாக உள்ள மண்சாலையில் பயணித்து, பாண்டியார் - புன்னம்புழா ஆற்றில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு, வாகன சவாரி சென்று வருவதிலும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இங்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆரல் நன்னீர் மீனகம், தாவர பசுமைக்குடில், பெரணி இல்லம், காட்சி கோபுரம் சென்று இயற்கை ரசிப்பதுடன், 'ஜிப் லைனில்' தொங்கியபடி சாகச பயணம் செய்வதிலும், வனப்பகுதியில் மண் சாலை வழியாக வாகன சவாரி செய்து பாண்டியார் - புன்னம்புழா ஆற்றின் நீர்வீழ்ச்சி ரசிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் தங்கி இயற்கை ரசிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இயற்கையை நேசிப்பவர்கள் இயற்கை ரசிக்க கூடிய சுற்றுலா பயணிகள், சுற்றுலா மேற்கொள்ள இப்பகுதி சிறந்த இடமாகும். குறிப்பாக வனப்பகுதியில் உள்ள மண் சாலை வழியாக நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது,' என்றனர்.
27-Dec-2025