உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூன்று காட்டெருமைகள் பலியான சம்பவம்: வனத்துறை விசாரணை வனத்துறை தீவிர விசாரணை

மூன்று காட்டெருமைகள் பலியான சம்பவம்: வனத்துறை விசாரணை வனத்துறை தீவிர விசாரணை

ஊட்டி : தொட்டபெட்டா வனத்தில் மூன்று காட்டெருமைகள் பலியான சம்பவத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊட்டி அருகே தொட்டபெட்டா வனப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று காட்டெருமைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் வனத்துறையினர்சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், அடுத்தடுத்து மூன்று காட்டெருமைகள் இறந்து கிடந்ததைபார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின், கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''தொட்டபெட்டா வனப்பகுதியில் ஒரு ஆண், இரண்டு பெண் என மூன்று காட்டெருமைகள் இறந்து கிடந்தன. ஒரே சமயத்தில் மூன்று காட்டெருமைகள் இறந்து கிடந்ததால் விசாரணை செய்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் முழு தகவல் தெரிய வரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ