உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதரில் ஓய்வெடுத்து வரும் புலி: வனத்துறை எச்சரிக்கை

புதரில் ஓய்வெடுத்து வரும் புலி: வனத்துறை எச்சரிக்கை

ஊட்டி;'ஊட்டி தலைகுந்தா, அத்திகல் சாலையில் புலி நடமாட்டம் உள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் சென்றுவர வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, புலி, யானை, சிறுத்தை மற்றும் கரடி உள்ளிட்ட வன விலங்குகள், அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது தொடருகிறது.இதனால், மனித- விலங்கு மோதல், அவ்வப்போது நடப்பது வாடிக்கையாக உள்ளது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, வன விலங்குகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், ஊட்டி தலைகுந்தா பகுதியில் அத்திகல் சாலை ஓரத்தில் புலி நடமாடியுள்ளது. புதர் மறைவில் நீண்ட நேரம் பதுங்கி இருந்த புலி, வாகனங்களின் சப்தத்தால், காட்டுக்குள் சென்று மறைந்துள்ளது.மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், புலி நடமாட்டத்தால், கால்நடைகள் மற்றும் மக்களுக்கு அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. இதனை அப்பகுதியில் சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்