உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுற்றுலா சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சுற்றுலா சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஊட்டி:ஊட்டியில் சுற்றுலா சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சுற்றுலா நகரமான ஊட்டியில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க, கேரளா, கர்நாடகா உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து சொகுசு காரில் வந்த சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலா ஸ்தலங்களை கண்டு ரசித்த பின், நேற்று கர்நாடகா திரும்பினர். தேசிய நெடுஞ்சாலையில், எச்.பி.எப்., அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் காரில் இருந்து உடனடியாக கீழே இறங்கினர். இருப்பினும் காரில் தீ கட்டுக்கடங்காமல் எரிய துவங்கியது. அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ