| ADDED : ஜூன் 07, 2024 12:22 AM
ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் குழிகளில் தண்ணீர் தேங்குவதால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.சர்வதேச சுற்றுலா மையமான, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை காண, நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடை விழா உட்பட, சாதாரண நாட்களிலும் பயணியர் வருகை அதிகரித்து வருகிறது.ஆனால், பூங்காவில் தேவையான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. பூங்கா நுழைவு வாயிலில், கான்ரீட் பெயர்ந்து குழிகள் ஏற்பட்டுள்ளன. மழை நாட்களில், குழிகளில் தண்ணீர் தேங்குவதால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பூங்கா நிர்வாகம், நடப்பாண்டு நடந்து முடிந்த, 126 மலர் கண்காட்சியின் போது, வழக்கத்திற்கு மாறாக, பெரியவர்களுக்கு, 100 ரூபாய், சிறுவர்களுக்கு, 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனால், பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்தும், பூங்கா நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பது அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.எனவே, பூங்கா நிர்வாகம், பயணியரின் தேவையான பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.