உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாய்ஸ் கம்பெனி பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பாய்ஸ் கம்பெனி பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னுார்;குன்னுார் பாய்ஸ் கம்பெனி கேட்டில் பவுண்ட் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது.குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது இந்நிலையில், நேற்று காலை மழையின் தாக்கம் குறைந்து இருந்த நிலையிலும் பாய்ஸ் கம்பெனி கேட்டில் பவுண்டு சாலையில் முட்புதர்களுடன் பைன் மரம் சாலையில் விழுந்தது.சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மின்கம்பியில் விழுந்தது.பெரியளவில் கார் சேதம் ஏற்படவில்லை. மின்தடை ஏற்பட்டது. பழைய அருவங்காடு பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் வந்து சென்ற மரத்தை வெட்டி முட்புதர்களுடன் அகற்றினர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பிகள் சரி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ