உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 153 கிலோ சந்தன கட்டை கடத்திய இருவர் கைது

153 கிலோ சந்தன கட்டை கடத்திய இருவர் கைது

பாலக்காடு:பாலக்காடு அருகே, 153 கிலோ சந்தன கட்டைகள் கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒற்றைப்பாலம் வனச்சரக அதிகாரி தினேஷின் தலைமையில், சொரனூர் சூரக்கோடு பகுதியை சேர்ந்த ஹம்சப்பா, 53, வீட்டில் வன துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, ஹம்சப்பா, அவரது நண்பர் அப்துல் அசீஸ், 54, ஆகியோர் சேர்ந்து, வீட்டின் பின் பக்கத்தில் இருந்த ஷெட்டில் சந்தன மர கட்டைகளை அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், 153 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை திருச்சூர் வெள்ளார்க்காடு வனத்தில் இருந்து வெட்டி கடத்தி வந்தது என தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை