உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரும்பு கேட் திருடிய இருவர் கைது

இரும்பு கேட் திருடிய இருவர் கைது

குன்னுார்:குன்னுார் அருகே இரும்பு கேட் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.குன்னுார் மவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோதிலால். அளக்கரை சாலை அருகே உள்ள இவரின் தேயிலை தோட்டத்தின் கேட் திருடப்பட்டு செல்வதாக அங்குள்ள தொழிலாளர்கள் தகவல் அளித்தனர்.இதன் பேரில், வெலிங்டன் போலீசார் அங்கு சென்று இருவரிடம் விசாரணை நடத்தி 'பிக்--அப்' வாகனத்தில் ஏற்றிய இரும்பு கேட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், அரவேணு பகுதியை சேர்ந்த பிரகாஷ்.30, நாமக்கல் குமாரபாளையம் பகுதி சேர்ந்த ராஜு,33, என்பது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை