உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்குவாரி நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி

கல்குவாரி நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி

பாலக்காடு: பாலக்காடு அருகே, கல்குவாரி நீரில் மூழ்கி இரு மாணவர்கள் இறந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோணிக்கழி பகுதியை சேர்ந்த ரவீந்திரனின் மகன் அபய், 21. இவர், லக்கிடியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனின் மகன் மேகஜ், 18; பிளஸ் 2 மாணவன். அபய், மேகஜ் இருவரும் நண்பர்கள்.இந்நிலையில், அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு, கல்லடிக்கோடு அருகே உள்ள கல்குவாரியை சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர். அங்கு தேங்கி நிற்கும் நீரில் குளிக்க இறங்கியபோது, இருவரும் தாழ்வான பகுதியில் சிக்கிக் நீரில் மூழ்கியுள்ளனர். கல்குவாரி கரையில் இரு ஜோடி காலணிகள் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசாரும், பொதுமக்களும், கல்குவாரி நீரில் நீண்ட நேரம் தேடி, இருவரின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின், அவர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லடிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ