| ADDED : மே 16, 2024 06:05 AM
கூடலுார், : கூடலுார் அரசு கால்நடை மருத்துவமனை அருகே, சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கூடலுார் நகரப்பகுதியில், கொட்டப்படும் குப்பைகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு வருகின்றன. பெரும்பாலான வியாபாரிகள், குப்பைகளை குப்பை தொட்டில் சேகரித்து, வாகனங்களில் வரும் நகராட்சி ஊழியர்களிடம் வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி, அரசு கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் வழி அருகே, குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி எரித்து வருகின்றனர். அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில்,'குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால், கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு கால்நடை மருத்துவமனை ஒட்டி கொடுத்த குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், தொற்று நோய்கள் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றுவதுடன், மீண்டும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.