மேலும் செய்திகள்
பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு
31-Jan-2025
ஊட்டி; ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், பாலின உணர்திறன் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நீக்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதில், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பவானி சுப்பராயன் மற்றும் மாவட்ட பொறுப்பு நீதிபதி நக்கீரன் ஆகியோர் பங்கேற்று, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலின உணர்திறன் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். அதில், 'இத்தகைய குற்றங்கள் நிகழாமல் இருக்க, காவல்துறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்கும் பட்சத்தில், நீதித்துறை தேவையான பாதுகாப்பு அளிக்கும்,' என, அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட நீதிபதி முரளிதரன், அனைத்து அரசு துறை அலுவலர்கள், கல்லுாரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
31-Jan-2025