விழும் நிலையில் சுற்றுச்சுவர்
அன்னுார்;அன்னுார், கைகாட்டியில், மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் பயணியர் மாளிகை உள்ளது இங்கு அலுவலகத்தின் வடக்கு பகுதியில், 150 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் உள்ளது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், அதை ஒட்டி தண்ணீர் தேங்கி நின்றதாலும் சுற்றுச்சுவர் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. சுற்றுச்சுவரின் பின்புறம், அன்னுார் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. சுற்றுச்சுவருக்கு அருகில் பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக நிற்கின்றனர். இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சுவர்கள் பலமிழந்து காணப்படுகிறது. 'எனவே, நெடுஞ்சாலை துறை உடனடியாக புதிதாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்,' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.