உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிணற்றை சுற்றிலும் கழிவு பொருட்கள் கிராமத்தில் குடிநீர் மாசடையும் அபாயம்

கிணற்றை சுற்றிலும் கழிவு பொருட்கள் கிராமத்தில் குடிநீர் மாசடையும் அபாயம்

பந்தலுார், ;பந்தலுார் அருகே சேரங்கோடு, ஊராட்சிக்கு உட்பட்ட பைங்கால் பழங்குடியின கிராமத்தில் குடிநீர் கிணற்றை சுற்றிலும் பாக்கு கழிவுகள் கொட்டுவதால் குடிநீர் பாதிக்கப்படுகிறது.பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பைங்கால் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில், 20-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் தாழ்வான தனியார் தோட்டத்தில் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிணற்றை சுற்றிலும் பாக்கு கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. கிணற்றின் மேல் பகுதி யில் மோட்டார் குழாய் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள, சிறிய பாதையின் வழியாக கழிவு கிணற்று நீரில் கலந்து குடிநீர் மாசடைந்து வருகிறது. மாசடைந்த குடிநீரை பருகும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் இது குறித்து பலமுறை, கிராமத்து மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, பழங்குடியின மக்கள் உள்ளிட்ட கிராமத்து மக்களுக்கு, சுகாதாரமான முறையில். குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ