மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
பந்தலுார்;பந்தலுாரில் சீரமைத்த நெடுஞ்சாலை தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதால், வாகனம் ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.பந்தலுார் பஜார் பகுதி தாலுகா தலைநகராக உள்ளதுடன், பல்வேறு அரசு துறை மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியாக உள்ளது. மேலும், தமிழக-கேரளா இணைப்பு மாநில நெடுஞ்சாலை உள்ளதால், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள், தமிழக -கேரளா அரசு பஸ்கள் அதிக அளவில் வந்து செல்கிறது. இந்நிலையில், பந்தலுார் பஜாரில் சாலை முழுமையாக பழுதடைந்து குழியாக மாறி உள்ளது. இதனால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், கார் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் செல்லும்போது பழுதடைவதும் தொடர்கிறது. லேசான மழை பெய்தாலும் சாலையில், தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுனர்கள் நிலை தடுமாறுகின்றனர். இதனால், சாலையின் மைய பகுதியில் உள்ள கால்வாயை அகலப்படுத்தி சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். நெடுஞ்சாலை துறையினர், 15 லட்சம் ரூபாய் செலவில் பெயரளவுக்கு கால்வாய் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். தொடர்ந்து, கால்வாய் அருகே மீண்டும் நிதி ஒதுக்கி சிமெண்ட் தளம் அமைத்தனர். எனினும், எந்த பயனும் இல்லாமல் போனது. நேற்று முன்தினம் பெய்த லேசான மழையில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால், 'டூ வீலரில்' சென்ற பலரும் குழி இருப்பது தெரியாமல், விழுந்து எழுந்து சென்றனர்.எனவே, கால்வாய் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வழிந்தோட உரிய வசதி ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025