உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மனைவி நலவேட்பு விழா திரளானோர் பங்கேற்பு

மனைவி நலவேட்பு விழா திரளானோர் பங்கேற்பு

ஊட்டி;ஊட்டி அப்பர் பஜார் 'ஸ்கை' யோகா தவ மையத்தில், மனைவி நலவேட்பு விழா நடந்தது.ஊட்டி மனவளக்கலை யோகா தவ மைய தலைவர் முனைவர் சுகுமார் வரவேற்றார்.நிர்வாக அறங்காவலர் ஜெயராமன் தலைமை வகித்து விழாவை நடத்தி வைத்தார். மூத்த பேராசிரியர் சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''குடும்பத்தில் வாழ்க்கை துணையின் மதிப்பை உணர்ந்து, பெண்மையின் மாண்பு போற்றப்பட வேண்டும்.அந்த வகையில், தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் துணைவியார், அன்னை லோகாம்பாள் பிறந்தநாளை, மனைவி நல வேட்பு தினமாக, மனவளக்கலை யோகா மையங்களில், ஆக., 30ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மனைவியை மதித்து, பாராட்டுவது, கணவரின்கடமை,'' என்றார். இதில், மனவளக்கலை நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை