மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
22 hour(s) ago
கூடலுார்:கூடலுார் தேவர்சோலை அருகே, காட்டு யானை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, 4வது நாளாக மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.கூடலுார் தேவர்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் காட்டு யானைகள் நுழைந்து விவசாய பயிர்கள் வாகனங்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வருகிறது.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அஞ்சுகுன்னு பகுதியில் கிராம மக்கள், 11ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வனத்துறையினர், முதுமலையிலிருந்து இரண்டு 'கும்கி' யானைகளை அழைத்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.எனனும், 'காட்டு யானையை அப்பகுதியில் இருந்து முற்றிலும் விரட்ட வேண்டும்' என, மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன் தினம் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தி, 4வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.
22 hour(s) ago