மேலும் செய்திகள்
காரும், பஸ்சும் மோதல்; குழந்தை பரிதாப பலி
24-Feb-2025
பாலக்காடு,; பாலக்காடு அருகே, லாரியும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்தார்.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், புலாபற்றை குனிப்பாறை பகுதி சேர்ந்த பினோயின் மனைவி தீபா, 38. தனியார் மருத்துவமனையில் லேப் ஊழியரான இவர், நேற்று காலை வீட்டிலிருந்து வேலைக்கு ஸ்கூட்டரில் சென்றார். அப்போது, கோழிக்கோடு - -பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் முண்டூர் சந்திப்பில், எதிரில் வந்த லாரி மோதியது. இதில், தீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கல்லடிக்கோடு போலீசார், தீபாவின் உடலை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
24-Feb-2025