உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின் கம்பியில் படர்ந்த செடி அகற்றிய ஊழியர்கள்

மின் கம்பியில் படர்ந்த செடி அகற்றிய ஊழியர்கள்

குன்னுார்;குன்னுார் உபதலை மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட அருவங்காடு ஜெகதளா சாலையில் உள்ள மின்கம்பத்தின் 'ஸ்டே' ஒயரில், செடி, கொடி படர்ந்து காணப்பட்டது. இப்பகுதியில் உலா வரும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு மின்சாரம் தாக்கும் அபாயம் இருந்ததுடன் மக்களும் அச்சத்துடன் நடந்து சென்றனர்இது தொடர்பாக, கடந்த, 31ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. உபதலை மின் பகிர்மான வட்ட உதவி பொறியாளர் நிர்மல் குமார் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் வந்து செடி, கொடிகளை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.இதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் முட்புதர்கள் வளர்ந்துள்ளதால், அவற்றை அகற்ற வெடி மருந்து தொழிற்சாலை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை