உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக அணை திறப்பு வினாடிக்கு 1,000 கன அடி வெளியேற்றம்

குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக அணை திறப்பு வினாடிக்கு 1,000 கன அடி வெளியேற்றம்

ஊட்டி : ஊட்டி காட்டு குப்பையில் நடந்து வரும் குந்தா நீரேற்று மின் திட்டப்பணிக்காக, எமரால்டு அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.ஊட்டி அருகே காட்டு குப்பையில், 1,850 கோடி ரூபாயில் குந்தா நீரேற்று மின் திட்டப்பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2022-ம் ஆண்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இதுவரை, 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்தக்கட்ட பணிகள் விரைவாக நடந்து வருகிறது. காட்டு குப்பையில் நடந்து வரும் நீரேற்று பணிக்காக எமரால்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்க மின்வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று காலை முதல், வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை திறக்கப்பட்டதால் தண்ணீர் நீரோடை வழியாக கரைபுரண்டோடியது.குந்தாமின் திட்ட மேற்பார்வை பொறியாளர் முரளி கூறுகையில்,''காட்டுக்குப்பை பகுதியில் நடந்து வரும் குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக எமரால்டு அணையில் இருந்து இன்று (நேற்று) முதல் ஒரு மாதத்திற்கு, வினாடிக்கு, 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை