மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
22-Jan-2025
ஊட்டி; மஞ்சூர் அருகே அப்பர் பவானியில், 1000 மெகாவாட் நீரேற்று மின் திட்ட பணிக்காக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா, பைக்காரா நீர் மின்வட்டத்தின் கீழ், 12 மின் நிலையங்கள், 13 அணைகள் உள்ளன. இவற்றின் மூலம், 32 மின் உற்பத்தி பிரிவுகளின் கீழ், தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். 1000 மெகாவாட் மின் திட்டம்
இந்நிலையில், மஞ்சூர் அருகே, குந்தா மின்வட்டத்திற்கு உட்பட்ட அப்பர் பவானியில், 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கான, அப்பர் பவானி நீரேற்று மின் திட்ட பணிகளை, தேசிய அனல் மின் கழகத்துடன், மாநில மின் வாரியம் இணைந்து மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 5000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஒட்டி, சென்னை மின்வாரிய தலைமை அதிகாரிகள்; தேசிய அனல் கழக அதிகாரிகள் இணைந்து, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அப்பர் பவானி, அவலாஞ்சி, காட்டு குப்பை, கோரகுந்தா உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். குந்தா மின்வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் முரளி கூறுகையில்,''குந்தா அருகே, 1000 மெகாவாட் உற்பத்திக்கான, அப்பர் பவானி நீரேற்று திட்ட பணிக்காக, தேசிய அனல் மின் கழக அதிகாரிகளுடன், தமிழக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பின்பு, இத்திட்டத்தை துவக்கப்படும்,''என்றார்.
22-Jan-2025