மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
6 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
6 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
6 hour(s) ago
ஊட்டி;நாடு முழுவதிலும் உள்ள ராமகிருஷ்ண மடங்களின்,150 துறவிகள் ஊட்டி ராமகிருஷ்ண மடத்திற்கு விஜயம் செய்தனர்.கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷனில் குட முழக்கு விழா கடந்த வாரம் நடந்தது. அதில், பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து, 150 க்கும் மேற்பட்ட துறவிகள் வந்தனர்.நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து, ஊட்டியில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு விஜயம் செய்ய திட்டமிட்டு, 150 துறவிகள் ஊட்டி ராமகிருஷ்ண மடத்திற்கு வந்தனர். ஊட்டி ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகிகள் துறவிகளை வரவேற்றனர்.முன்னதாக, சுவாமி விவேகானந்தரின் சுருக்க கெழுத்தாளர் குட்வின் கல்லறை அமைந்துள்ள, செயின்ட் தாமஸ் தேவாலயத்துக்கு சென்று, அமைதி பிரார்த்தனை மேற்கொண்டனர். பின், ஊட்டி ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதான சீடரான சிவானந்த மகராஜ் ஆரம்பித்த ராமகிருஷ்ண மடத்திற்கு விஜயம் செய்து பிரார்த்தனையில் பங்கேற்றனர்.ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ராகவேஷானந்தர் மகராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் , திரளான பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago