உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் குரூப்-4 தேர்வு; 1,531 பேர் ஆப்சென்ட்

நீலகிரியில் குரூப்-4 தேர்வு; 1,531 பேர் ஆப்சென்ட்

ஊட்டி; நீலகிரியில் நடந்த குரூப்- 4 தேர்வில், 1,531 பேர் 'ஆப்சென்ட்' ஆயினர்.நீலகிரி மாவட்டத்தில், ஆறு வட்டங்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-4), 24 மையங்களில் நடந்தது.தேர்வு பணிக்காக, ஆறு பறக்கும் படை அலுவலர்கள், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். துணை வட்டாட்சியர் நிலையில், 14 மொபைல் யுனிட் மற்றும் பள்ளி கல்லுாரி உதவியாளர் நிலையில், 24 ஆய்வு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு, தேர்வு ஏற்பாடுகள் நடந்தன. காலை, 8:30 மணி முதல், 12:30 மணி வரை தேர்வு நடந்தது. மாவட்ட முழுவதும், 6,335 மாணவர்கள் தேர்வு எழுத இருந்தனர். இதில், 4,804 மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதிய நிலையில், 1,531 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை