மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
6 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
6 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
6 hour(s) ago
காட்டுத்தீ ஏற்பட்டதில் நீலகிரி மாவட்டத்தில், 30 ஏக்கர் பரப்பளவு வனப்பகுதிகள் கருகியதாக வனத்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட அறிவிப்பு:நீலகிரி மாவட்டம், குன்னுாரில் வெலிங்டன் அருகில், மார்ச், 12ல் காட்டுத்தீ ஏற்பட்டது.வனத்துறையின் உள்ளூர் அதிகாரிகள் குழு, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்திய விமானப்படை உள்ளிட்டோரின்உதவியுடன், சில நாட்கள் கழித்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில், 30 ஏக்கர் வனப்பகுதிகள் கருகின; அரிய வகை மூலிகைத் தாவரங்கள், மரங்கள் அழிந்தன. இப்பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, வருங்காலத்தில் தீ விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், நேற்று ஒரே நாளில், 10 மாவட்டங்களில், 73 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago