உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 99வது ஆண்டு திருவிழா; சீர்தட்டு ஊர்வலம் சிறப்பு

99வது ஆண்டு திருவிழா; சீர்தட்டு ஊர்வலம் சிறப்பு

குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு சித்திரை தேர் திருவிழா கடந்த, 4ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. நேற்று குன்னுார் தையல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 99 வது ஆண்டு திருவிழா நடந்தது. காலை சந்தான வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து, சீர் தட்டு ஊர்வலம் புறப்பட்டு, தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, அபிஷேக ஆராதனை, பரிவேட்டை நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பிறகு தேர் ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை தையல் தொழிலாளர்கள் பரிவேட்டை உற்சவ கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை