உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் பழத்தோட்டம் பகுதியில் மழையில் நனைந்தபடி வந்த கரடி

குன்னுார் பழத்தோட்டம் பகுதியில் மழையில் நனைந்தபடி வந்த கரடி

குன்னுார்; குன்னுார் பழத்தோட்டம் பகுதியில் மழையில் நனைந்தபடி உணவை தேடி வந்த கரடியால் மக்கள் அச்சமடைந்தனர்.குன்னுார் பகுதிகளில் கரடிகள் உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து, யாரும் இல்லாத வீடுகளின் கதவை உடைத்து பொருட்களை உட்கொண்டு சேதப்படுத்தி செல்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மழையின் போது, பகல் நேரத்தில் குன்னுார் பழத்தோட்டம் சாலையில் கரடி உலா வந்தது. இதனை அப்பகுதி மக்கள் எடுத்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை