ஆற்றை கடக்க பாலம் தேவை- நகராட்சி கமிஷனரிடம் மனு
பந்தலுார்; 'பந்தலுார் புளியம்பாறை கிராமத்தில் ஆற்றை கடக்க பாலம் அமைத்து தர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பந்தலுாரில், மா.கம்யூ., நிர்வாகிகள் வாசு, குஞ்சு முகமது, ரவிக்குமார், சுபைர் உள்ளிட்டோர், நெல்லியாளம் நகராட்சி கமிஷனர் சுவேதாவிடம் வழங்கி மனு: நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புளியம்பாறை கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து ஆமைக்குளம் கல்லுாரியில் இணைக்க கூடிய, நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை காலங்களில், ஆற்றை கடந்து வரும் நிலையில், மழை காலங்களில் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். மழை காலங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வி கூடங்களுக்கு செல்ல முடியாத சூழல் தொடரும் நிலையில், உடனடியாக இந்த பகுதியில் புதிய பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.