உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சாலையில் பழுதடைந்து நின்ற லாரி தமிழக--கேரளா போக்குவரத்து பாதிப்பு

 சாலையில் பழுதடைந்து நின்ற லாரி தமிழக--கேரளா போக்குவரத்து பாதிப்பு

பந்தலுார்: பந்தலுார் அருகே தொண்டியாளம் பகுதியில், பழுதடைந்து நின்ற லாரியால், தமிழக-கேரளா போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பந்தலுாரிலிருந்து உப்பட்டி வழியாக, கேரளா மாநிலம் மற்றும் பாட்டவயல், பிதர்காடு, தேவர்சோலை, நெலாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு, பகுதிகளுக்கும் செல்லும் சாலை அமைந்துள்ளது. நேற்று மதியம் சேரம்பாடியிலிருந்து, அத்திக்குன்னா தனியார் தேயிலை தோட்டத்திற்கு தேயிலை துாள் கழிவுகளை ஏற்றிய லாரி சென்றது. தொண்டியாளம் என்ற இடத்தில், மேடுபாங்கான பகுதியில் லாரி பழுதடைந்து நின்று விட்டது. குறுகலான சாலையாக உள்ளதால், வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், அரசு பஸ்கள், தமிழகம் மற்றும் கேரளா செல்லும், பிற வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலையில், மக்கள் பாதிக்கப்பட்டனர். போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் திரும்பி அனுப்பினர். மாலை, 4:00 மணிக்கு போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை