காட்டெருமை தாக்கி கட்டட தொழிலாளி பலி
குன்னுார் : குன்னுார் வண்டிச்சோலை அருகே அம்மன் நகர் பகுதியில் காட்டெருமை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.குன்னுார் வண்டிச்சோலை அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்,50. கட்டட தொழிலாளி. அவர் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் பம்ப்ஹவுசில் மோட்டார் ஆன் செய்ய நேற்று காலை சென்றார். அவரை காட்டெருமை தாக்கிய போது, அலறல் சப்தம் கேட்டதால், மக்கள் அங்கு சென்று பார்த்த போது பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்திருந்தார். தகவலின் பேரில், ஆம்புலன்சில் குன்னுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.