உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  அடி பாகம் சேதமான மின் கம்பம் விழுவதற்கு முன்பு மாற்ற வேண்டும்

 அடி பாகம் சேதமான மின் கம்பம் விழுவதற்கு முன்பு மாற்ற வேண்டும்

பந்தலுார்: பந்தலுார் பஜாரை ஒட்டிய பகுதியில் மின் கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பந்தலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, தங்கமலை பழங்குடியினர் காலனி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டிய தனியார் தேயிலை தோட்டத்தில், உயிரழுத்த மின் கம்பம் ஒன்று அடி பாகம் முழுவதும் துருப்பிடித்து விழும் நிலையில் உள்ளது. இதன் கீழ் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் சாலை அமைந்துள்ள நிலையில், பலத்த காற்று வீசினால், மின்கம்பம் அடியோடு பெயர்ந்து விழுந்து, பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். எனவே, பாதிப்புகள் ஏற்படும் முன்னர், மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை