உயிரிழந்த காட்டு யானை; வனத்துறை விசாரணை
பந்தலுார், : முதுமலை புலிகள் காப்பகம் நெலக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, மேபீல்டு வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்றைய ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வனத்தின் உட்பகுதியில் யானையின் உடல் கிடந்தது தெரிய வந்தது. வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத் துறையினர் ஆய்வு செய்தபோது, யானை உயிரிழந்து பல நாட்கள் கடந்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஆய்வு செய்ததுடன், யானையின் உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். விசாரணை நடந்து வருகிறது.