| ADDED : மார் 01, 2024 12:02 AM
கூடலுார்;கூடலுார் நந்தட்டி அருகே, கோழிக்கோடு சாலையில் மரம் விழுந்து, தமிழக -கேரளா-கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடலுார், நந்தட்டி அருகே, ஆபத்தான நிலையில் இருந்த, மரம் நேற்று முன்தினம் மாலை, கோழிக்கோடு சாலையில் சாய்ந்தது. அதில், மின்கம்பிகளும் சேதமடைந்து, மின் சப்ளை பாதிக்கப்பட்டது.மேலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டு கூடலுார், கர்நாடகா, கேரளா இடையே இயக்கப்படும் வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டது. கூடலுார் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் சங்கர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.மின் கம்பிகளை, மின் ஊழியர்கள் சீரமைத்து மின் சப்ளை வழங்கினர்.