உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிலுவை ஏந்தி தவக்கால பரிகார பவனி திரளான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்பு

சிலுவை ஏந்தி தவக்கால பரிகார பவனி திரளான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்பு

ஊட்டி;ஊட்டியில் கிறிஸ்துவ மக்கள் சார்பில், 6 கி.மீ., துாரம் நடந்த தவக்கால பரிகார பவனியில், ஏராளமானோர் பங்கேற்றனர்.கிறிஸ்துவ மக்களின் முக்கிய பண்டிகையான 'ஈஸ்டர்' பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் தவக்காலத்தை கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின், 5வது ஞாயிற்று கிழமையான நேற்று, கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் சார்பில், இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளின் நினைவாக, சிலுவையை சுமந்தும், பக்தி பாடல்கள் மற்றும் ஜெபங்களுடன் தவக்கால பரிகார பவனி நடந்தது.ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலயத்தில் திருக்கருதி ஆண்டவர் பேரணி, பங்குத்தந்தை ரவி லாரன்ஸ், குருசடி பங்குத் தந்தை ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் துவங்கியது. சிறிய, பெரிய சிலுவைகளை கையில் ஏந்தி கலந்து கொண்ட கிறிஸ்துவ மக்களின் இந்த பவனி, மருத்துவமனை சாலை, கூட்ஷெட்,மேரீஸ்ஹில், ரோகிணி, காந்தள் வழியாக, 6 கி.மீ., தூரம் சென்று, குருசடி திருத்தலத்தை அடைந்தது. தொடர்ந்து, மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், உலகில் அமைதி நிலவுவதுடன், மழை வேண்டியும் ஜெபிக்கப்பட்டது. திருப்பலி நிறைவில், அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ