கிருத்திகை பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோத்தகிரி; கோத்தகிரி டானிங்டன் பகுதியில் அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இக்கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 48 நாள் மண்டல பூஜை நிறைவு பெற்றது. தொடர்ந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கிருத்திகை நாளான நேற்று உபயதாரர்களின் பங்களிப்புடன், அதிகாலை முதல், அம்மன், முருக பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.