உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் பகுதியை சேர்ந்தவர் கேரளாவில் யானை தாக்கி பலி

பந்தலுார் பகுதியை சேர்ந்தவர் கேரளாவில் யானை தாக்கி பலி

பந்தலுார்; கேரளா மாநிலம் வயநாடு பகுதியில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பந்தலுார் அருகே வெள்ளேரி சொரியான் காப்பு பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்தவர் மானு,47. இவர், கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் காப்பாடு பழங்குடியின கிராமத்தை சேர்ந்த சந்திரிகா,38, என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் ஆட்டோவில் காப்பாடு கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு வயல் பகுதியில் நடந்து செல்லும் போது, எதிரே வந்த யானை தாக்கியதில், மானு உயிரிழந்தார். சந்திரிகா ஓடி உயிர் தப்பினார்.நேற்று முன்தினம் காலை இந்த வழியாக வந்தவர்கள் மானுவின் உடலை பார்த்து, அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். பொதுமக்கள் உயிரிழந்த உடலுடன் முற்றுகையில் ஈடுபட்டனர். அங்கு வந்த முத்தங்கா வனவிலங்கு காப்பக வன அலுவலர் விமல் டாலியா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 'உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு முதல் கட்டமாக, 5 லட்சம் ரூபாய்; விரைவில், மேலும், 5 -லட்சம் ரூபாய் வழங்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பகல், 12:00 -மணிக்கு உடல் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக சுல்தான் பத்தேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மானு தமிழக பகுதியை சேர்ந்தவர் என்பதால், பந்தலுார் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ., அசோக்குமார் மற்றும் தமிழக வனத்துறையினர், அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ