மேலும் செய்திகள்
போலீஸ் பறிமுதல் செய்த வேனுக்கு தீ: ஒருவர் கைது
29-Nov-2024
பாலக்காடு; பாலக்காடு அருகே, ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிஷ், 35. இவர், நேற்று காலை, 10:45 மணிக்கு, தனது காரில் மணலி பகுதியில் இருந்து, திருவாலத்தூர் சென்று கொண்டிருந்தார்.பாலக்காடு ஸ்டேடியம் பைபாஸ் ரோட்டில் சென்ற போது, காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதை கண்ட அவர் காரை விட்டு இறங்கினார். இதையடுத்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதைக் கண்ட அப்பகுதி மக்களும், தகவல் அறிந்து வந்த பாலக்காடு டவுன் தெற்கு போலீசாரும் இணைந்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். சம்பவத்தில் கார் முழுமையாக சோதமடைந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரின் பேட்டரி வயரில் என்பட்ட மின் கசிவால், தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் கூறினர்.
29-Nov-2024