உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பல்லாங்குழியான சாலை: மக்கள் அவதி

பல்லாங்குழியான சாலை: மக்கள் அவதி

பந்தலுார் ; பந்தலுார் இந்திரா நகர் சாலை பழுதடைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பந்தலுார் பஜாரில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவில் இந்திரா நகர் கிராமம் உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. நெடுஞ்சாலையிலிருந்து கிராமத்திற்கு செல்ல, நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை உள்ளது. இந்த சாலை மழையின் போது முழுமையாக சேதமாகி குழிகளாக மாறி உள்ளது.இதனால், சாலையில் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், இரவு நேரத்தில் சிறுத்தை மற்றும் காட்டுப்பன்றியின் தொல்லையில், நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.சாலை நிலை குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, 'நகராட்சி மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கூறியும் இதுவரை,எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, பருவ மழை தீவிரமடையும் முன்பு, சீரமைத்து தர வேண்டியது அவசியம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ