உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மோசமான சாலையில் தடுமாறும் பயணம்

மோசமான சாலையில் தடுமாறும் பயணம்

பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா வாழவயல் சாலை சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பந்தலுார் அருகே தேவாலா வாழவயல் அம்சாகடை என்ற இடத்திலிருந்து அரசு பள்ளி, தேவாலா ஹட்டி பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலையை,100- குடும்பத்தினர் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் இரவு நேரங்களில் இந்த பகுதியில் காட்டு யானைகள் வந்து செல்வதால், இரவில் வனத்துறையினர் ரோந்து வாகனங்களும் சென்று வருகிறது. ஆனால், சாலை மோசமான நிலையில் உள்ளதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், ‘அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளதால் நகராட்சி நிர்வாகம், இந்த பகுதி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை