மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை செய்தவர்கள் கைது
26-Oct-2026
குன்னுார்: குன்னுார் மார்க்கெட்டில் ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். குன்னுார் மார்க்கெட்டில் விக்னேஷ என்பவரின் ஜெராக்ஸ் கடையில் கடந்த, 12ம் தேதி இரவு பூட்டை உடைத்து, 2,000 ரூபாய் திருடப்பட்டது. டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வபாண்டி,26, என்பவரை கைது செய்தனர். இவர், எம்.ஜி.ஆர்., நகரில் தங்கி இங்கு திருட்டில் ஈடுபட்டதும், வெளி மாவட்டங்களில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர்மீது நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
26-Oct-2026