உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரம் விழுந்து தடுப்பு சுவர் சேதம்!

மரம் விழுந்து தடுப்பு சுவர் சேதம்!

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பார்க் ஐ.டி.ஐ., அருகே பெரிய மரம் விழுந்ததால் தடுப்பு சுவர் சேதமானது. நீலகிரி மாவட்டத்தில் மழை தாக்கம் முடிந்து பனியின் தாக்கம் துவங்கியுள்ளது. இந்நிலையில், குன்னூர் சிம்ஸ் பார்க் ஐ.டி.ஐ., அருகே இன்று (நவ.,22) பெரிய மரம் ஒன்று தடுப்புச்சுவரை உடைத்து சாலையில் விழுந்தது. மரம் விழுந்த நேரத்தில் அந்த வழியாக சுற்றுலா பயணிகள் நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை பவர் ஷா உதவியுடன் அறுத்து அப்புறப்படுத்தினர். மரத்தின் பெரும்பகுதி உடைந்த தடுப்புச்சுவர் இடிபாடுகளை பொக்லைன் வரவழைத்து முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ