உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானை; அச்சத்தில் தொழிலாள்கள்

தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானை; அச்சத்தில் தொழிலாள்கள்

கூடலுார் : கூடலுார் அருகே, காலை நேரத்தில் தனியார் தேயிலை தோட்டத்தில் முகாமிடும் காட்டு யானையால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுார் தேவர்சோலை அருகே, பாடந்துறை பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை, இரவு நேரங்களில் விவசாய தோட்டம், குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து சென்ற நிலையில், தற்போது பகல் நேரங்களிலும் வர துவங்கியுள்ளது.இந்த யானை பாடந்துறை அருகே தனியார் தேயிலை தோட்டத்தில், 'ஹாயாக' நடந்து சென்றது. அதனை பார்த்த தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.தகவல் அறிந்து வந்த வன ஊழியர்கள் யானையை விரட்டினர். அங்கிருந்து சென்ற யானை, காபி தோட்டத்தில் முகாமிட்டது. தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். அவை குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர்.மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில், கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள யானை, பகல் நேரத்திலும், தேயிலை தோட்டங்களுக்குள் வருவதால், மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, அதனை விரட்ட வனத்துறைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ