மேலும் செய்திகள்
ஆற்றில் மூழ்கி மாணவி பலி
11-Jul-2025
பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆற்றுக்கு குளிக்க சென்ற வாலிபர் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு புல்லச்சேரி நம்பியம்படி பகுதியை சேர்ந்த அயூப் என்பவரின் மகன் அஷ்பின், 18. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இவர், கல்லுாரியில் சேர்வதற்காக காத்திருந்தார். இவர், நேற்று காலை நண்பர் ஜோவான் என்பவருடன் வீட்டின் அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது, ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி அஷ்பின் நீரில் மூழ்கினார். இதை கண்ட ஜோவான் சப்தமிட்டதும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து, அஷ்பினை மீட்டு மண்ணார்க்காடு தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மண்ணார்க்காடு போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
11-Jul-2025