உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொறுப்புகளை உணர்ந்து நேர்மையாக பணியாற்றணும் : தேர்தல் செலவின பார்வையாளர் அறிவுரை

பொறுப்புகளை உணர்ந்து நேர்மையாக பணியாற்றணும் : தேர்தல் செலவின பார்வையாளர் அறிவுரை

ஊட்டி : 'தேர்தல் பணி பொறுப்புகளை உணர்ந்து நேர்மையாக பணியாற்ற வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி லோக்சபா தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்களாக, ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய தொகுதிகளுக்கு கிரண் மற்றும் மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் தொகுதிகளுக்கு சந்தீப் குமார் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று, ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் பேசுகையில்,''மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் என, பல்வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து அலுவலர்களும் தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்ந்து, பொறுப்புகளை உணர்ந்து நேர்மையாக பணியாற்ற வேண்டும். ஏதாவது தவறுகள் ஏற்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும். தேர்தல் பணியாற்றுகிறவர்கள் யாருக்கும் பயப்படகூடாது. குறைகள், கோரிக்கைகள் இருந்தால் தயங்காமல் தெரிவிக்கலாம்,'' என்றார்சந்தீப் குமார் மிஸ்ரா பேசுகையில், ''வாகன சோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். தேர்தல் செலவின கணக்குகளை உரிய முறையில் கண்காணித்து சம்மந்தப்பட்ட வேட்பாளர் கணக்கில் பதிவேற்ற வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ