உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையின் நடுவே வெள்ளை கோடு அமைக்காததால் விபத்து அபாயம்

சாலையின் நடுவே வெள்ளை கோடு அமைக்காததால் விபத்து அபாயம்

கோத்தகிரி; கோத்தகிரி -மேட்டுப்பாளையம் சாலையில், வெள்ளை கோடு அமைக்காததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.சமவெளி பகுதியில் இருந்து, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட மக்கள், குன்னுார் சாலையை அடுத்து, கோத்தகிரி சாலையை அதிகபட்சமாக பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலை, மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு, தேவையான வளைவுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால், இச்சாலையை பயன்படுத்துவதில், டிரைவர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இச்சாலையில், தார் போடும் பணி நடந்து வருகிறது. பல இடங்களில், சாலையின் நடுவே, வெள்ளை கோடு அமைக்காததால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.அத்துடன், விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே, போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், வாகன விபத்துகளை தவிர்க்க, சாலையின் நடுவே வெள்ளை கோடு அமைப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ