மேலும் செய்திகள்
பிறந்த நாளில் பஸ் மோதி எலக்ட்ரீஷியன் படுகாயம்
01-Nov-2025
குவாரியில் மிதந்த சிசு தாயிடம் விசாரணை
01-Nov-2025
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி பரசுராமன், 62. இவர், கடந்த அக். 24ம் தேதி அதிகாலை வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு நடந்து சென்றார்.சக்காந்தரை என்ற பகுதியில் வாகனம் மோதியதில், படுகாயமடைந்த அவரை, அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த உறவினர்கள், தீவிர சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரசுராமன், நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து பாலக்காடு டவுன் தெற்கு போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் விபின்குமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், பரசுராமன் மீது மோதியது, ஆட்டோ என்பதையும், கொப்பம் பகுதியைச் சேர்ந்த அபினேஷ், 29, என்பவர் ஆட்டோவை ஓட்டியதும் தெரிந்தது. இதையடுத்து, அவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
01-Nov-2025
01-Nov-2025