உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளிகள் அருகே பீடி, சிகரெட் விற்பனை செய்தால் நடவடிக்கை

பள்ளிகள் அருகே பீடி, சிகரெட் விற்பனை செய்தால் நடவடிக்கை

கூடலுார் ; 'கூடலுார் பகுதியில் பள்ளிகள் அருகே, 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை, பீடி, சிகரெட் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.கூடலுார் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவில் கடைகளில் புகையிலை, பீடி, சிகரெட் விற்பனை செய்ய போலீசார் தடை விதித்துள்ளனர். சிலர் தடையை மீறி இவைகளை விற்பனை செய்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தொடர்ந்து, கூடலுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீத் தலைமையில் போலீசார் கடந்த சில நாட்களாக பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில், 10க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த பீடி, சிகரெட்டை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.போலீசார் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கடைகளில், புகையிலை, பீடி, சிகரெட் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனை செய்து,விற்பனைக்கு வைத்திருந்த பீடி, சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை தொடரும். எனவே, வியாபாரிகள் பள்ளிகள் சுற்றி, 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை, பீடி, சிகரெட் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி