மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
08-Jul-2025
கூடலுார்; கூடலுாரில் விநாயகர் சதுர்த்தியை, முன்னிட்டு கூடுதல் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கூடலுார் விநாயகர் கோவில் வளாகத்தில், இந்து முன்னணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமை வகித்தார். நகர தலைவர் ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர் குருசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்,'கூடலுாரில் கடந்த ஆண்டை விட, கூடுதல் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிப்பது; பக்தர்கள், விழாவுக்கு, 5 நாட்கள் முன் காப்பு கட்டி விரதம் இருந்து சிலைகளை வைத்து பூஜிப்பது; விநாயகர் சிலை ஊர்வலத்தை சிறப்பாக நடத்துவது,' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
08-Jul-2025